%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 13 December 2018 - 19:17
உயர்நீதிமன்றின் ஆலோசனையை எதிர்ப்பார்த்துள்ள தேர்தல் ஆணையம்
268

Views
சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதவிடத்து, அது தொடர்பில் உயர் நீதிமன்றில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை இன்மை எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்பட்சத்தில், புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கும், அவ்வாறில்லையெனில் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் ஆலோசனை பெறவும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எந்த தேர்தலாக இருந்தாலும் 2 மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,763 Views
47,140 Views
3,490 Views
56,827 Views
1,385 Views
106,575 Views
Top