4+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88..%21+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%21
Thursday, 13 December 2018 - 19:37
4 வயது மகளுக்கு தாய் கொடுத்த தண்டனை..! தந்தை காவற்துறையில் முறைப்பாடு!
391

Views
தனது 4 வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்து காயமேற்படுத்திய  தாயொருவர் அலவத்துகொட காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை தான் அணிந்திருந்த உடையில் மலம் கழித்ததால் கோபமடைந்த தாய் , இவ்வாறு இரும்பு கம்பியை சூடாக்கி குழந்தையின் பின்பகுதியில் சூடு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09ம் திகதி அலவத்துகொட - சயிஸ்டன் பிளேஸ் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய குறித்த தாய் குழந்தைக்கு சூடு வைத்துள்ள நிலையில் , தந்தை வந்தவுடன் குழந்தை சம்பவம் தொடர்பில் தந்தைக்கு தெரிவித்துள்ளது.

பின்னர் , அவர் தனது மனைவி குழந்தைக்கு சூடு வைத்துள்ளதாக காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி , சந்தேகநபரான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top