Hirunews Logo
%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
Thursday, 13 December 2018 - 19:41
ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவில்லை - சம்பந்தன்
49

Views
ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போலியான ஒப்பந்தம் ஒன்று பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தத்திலும் இருதரப்பினரும் கைச்சாத்திடவில்லையென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த போலியான ஆவணத்தை வெளியிட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவிற்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் எந்தவித ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் அனுப்பபட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டதாக போலியான ஆவணம் ஒன்று உலாவுகின்றதாக அறியக்கிடைக்கிறது

இந்த ஆவணமானது வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,509 Views
25,340 Views
993 Views
13,005 Views
73 Views
59,622 Views
Top