சர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பை கோரியுள்ள போதைப் பொருள் ஒழிப்பு பணியகம்

Friday, 14 December 2018 - 8:17

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பேருவளை - பலப்பிட்டிய கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் சீசெல்ஸ் மற்றும் பங்களாதேஷில் வசிக்கும் சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வதற்காக சர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான தகவல்கள், சர்வதேச காவற்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த பணியகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகத்துக்குரியவரின் பேருவளையில் உள்ள வீட்டில் இருந்து செய்மதி தொலைபேசிகள் மற்றும் 59 லட்சம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பேருவளை - பலப்பிட்டிய கடற்பரப்பில் வைத்து 2778 மில்லியன் ரூபா பெறுமதியான 231 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் அண்மையில் காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகத்துக்குரியவர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips