ரணில் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Friday, 14 December 2018 - 13:09

%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது.

ஈவா வனசுந்தர, விஜித் மலல்கொட மற்றும் புவனெக அலுவிஹாரே ஆகிய மூன்று நீதியர்சகளைக் கொண்ட ஆயம் விசாரணைகளை மேற்கொள்கிறது.

பிரதமரும், அமைச்சரவையும் அந்தப் பதவிகளை வகிப்பதை தடைசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் 121 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட கேள்வி விராந்து மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு எதிராக மகிந்ததரப்பில் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன.

அதேநேரம், குறித்த மனுமீதான விசாரணையை, நீதியரசர் ஈவா வனசுந்தர அல்லாத ஐந்து பேர் கொண்ட ஆயம் விசாரணை செய்ய வேண்டும் என்று நேற்றையதினம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கஉள்ளிட்ட தரப்பினர் சார்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

எனினும் குறித்த மனுவை நிராகரித்த 3 பேர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் தொடர்ந்தும் இந்த ஆயமே அதனை விசாரணை செய்யும் என்று அறிவித்தது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips