பெரிஸ் உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்த இணக்கம்

Monday, 17 December 2018 - 10:16

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D++%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
காலநிலை மாற்றம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவமிக்க பெரிஸ் உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை கடந்த 2015ஆம் ஆண்டு கைச்சாத்தான நிலையில் அதனை 2020ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் அமுல்படுத்துவது குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

போலந்தில் கேட்டோஸ் (Katos) நகரில் நடைபெற்ற 'சி.ஓ.பி 24' மாநாட்டில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய பூமியின் வெப்பத்தினை இரண்டு செல்ஷியஸ் அளவிற்கு குறைக்க நாடுகள் தமது சம்மதத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த மைக்கேல் குர்திகா கருத்து தெரிவிக்கையில், பெரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையை ஒன்றிணைத்து நடைமுறைக்கு கொண்டுவருவது மிகவும் கடினமான விடயமாகும்.

எப்படியிருப்பினும், நீண்ட காலத்தை செலவிட்டு எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தற்போது இது சாத்தியமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கினை உலக நாடுகள் விரைவாக எட்ட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips