உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள்..!! படங்கள்

Sunday, 30 December 2018 - 12:34

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21%21+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் விஸ்வமடு மகா வித்தியாலய மாணவன் ஜெகதீஸ்வரன் நிறைநெஞ்சன் 3A பெறுபேற்றை பெற்று முல்லைத்தீவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கலைப்பிரிவில் உடையார்கட்டு  மகா வித்தியாலய மாணவி தங்கேஸ்வரன் ஜமுனாபிரியதர்சனி 3A பெறுபேற்றை பெற்று முல்லைத்தீவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

உயிர் முறைமைகள் பிரிவில் மாத்திரம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் மொஹிடீன் பாவா ரிஸா மொஹமட் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புனித திரேசா மகளிர் கல்லூரி மாணவி ஜெ.மகிழினியும், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவிலும் முதலிடம் பெற்றுள்ளனர்.

வர்த்தகப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மாணவி எஸ்.சாம்பவி முதலிடம் பெற்றுள்ளார்.

உயிரியல் பிரிவில் ஸ்கந்தவரோதய கல்லூரி மாணவி ரவிச்சந்திரன் கலெக்சியாவும், பௌதீக விஞ்ஞான பாடப் பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் சண்முகராசா சஞ்சித்தும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.


மாணவன் ஜெகதீஸ்வரன் நிறைநெஞ்சன்..








மாணவி தங்கேஸ்வரன் ஜமுனாபிரியதர்சனி...







Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips