நடவடிக்கை எடுப்பது குறித்து யோசனை...

Monday, 14 January 2019 - 12:44

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88...
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அடுத்த வார நாடாளுமன்ற அமர்வில் யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

மோதல் தொடார்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு அது குறித்த யோசனை மனுவாக முன்வைக்கப்படவுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரிக்க சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் ஆளுந்தரப்பு எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த குழு ஒரு மாத காலமாக காணொளிகள் மற்றும் வாக்குமூலங்களை ஆராய்ந்து விசாரணைகளை நடத்தியது.

இந்த அறிக்கை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் குறித்த அறிக்கை அவருக்கு கையளிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் குறித்த அறிக்கை சபாநாயகரால் சட்டமா அதிபருக்கு கையளிக்கப்படவுள்ளதுடன், மோதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்ய முடிமா என சபாநாயகர் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரவுள்ளார்.

ஏதேனும் ஒரு வகையில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என சட்டமா அதிபர் நிலைப்பாட்டை முன்வைக்கும்பட்சத்தில் நாடாளுமன்றத்தில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதலின்போது அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரம் குறித்த அறிக்கை விசாரணைக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips