%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Monday, 14 January 2019 - 14:07
போதைப்பொருட்களை பொதி செய்யும் நிலையம் சிக்கியது - காணொளி
570

Views
பிலியந்தலை – பட்டுவன்கல பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட போதைப்பொருட்களை பொதி செய்யும் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்றைய தினம் இந்த சுற்றவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சுற்றிவளைப்பின் போது அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பகுதியை சேர்ந்த 32 வயதான குறித்த சந்தேக நபர், அந்த வீட்டை வாடகை அடிப்படையில் பெற்றிருந்ததாக தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது சுமார் 20 லட்சம் பெறுமதியான 120 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்றைய தினம் கெஸ்பேவை நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top