Hirunews Logo
%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..
Monday, 14 January 2019 - 13:44
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு நடந்துள்ள பதறவைக்கும் சம்பவம்..
1

Views
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கற்கோவளம் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே மரணமடைந்துள்ளார்.

மோதலில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று பேர் கொண்ட குழுவினால் அவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

உணவு பொருட்களை விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியில் உணவு கொள்வனவு செய்ய முயற்சித்தபோது ஏற்பட்ட மோதலிலேயே இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறை வலய பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
 
தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளின் பொருட்டு சில காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காங்கேசன்துறை காவல்துறை வலய பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,585 Views
25,634 Views
1,533 Views
13,343 Views
138 Views
59,998 Views
Top