Hirunews Logo
+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F++%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D...
Monday, 14 January 2019 - 13:47
நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட மீனவர்...
1

Views
கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டு, அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தெல்வத்தை, பராலிய பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் திகதி படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற குறித்த மீனவர் கடந்த 11ம் திகதி ஆழ்கடலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து படகில் உடன் சென்ற மீனவர்கள் நால்வரும் சடலத்துடன், திருகோணமலை கொட்பே துறைமுகத்தை வந்தடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு என கூறிய சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்ததாக உடன் சென்றிருந்த மீனவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் துறைமுக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,585 Views
25,634 Views
1,533 Views
13,343 Views
138 Views
59,998 Views
Top