%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95++%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..%21
Monday, 14 January 2019 - 15:17
காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்..!
122

Views
நாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க  கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மன்னார் தொடக்கம் புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலபிடிய வரையான கடலோரத்துக்கு அப்பால்  மற்றும் ஹம்பாந்தோட்டை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடலோரத்துக்கு அப்பால் கடும் காற்று வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நாளை தினம் சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்கள், காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top