Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...%21%21
Monday, 14 January 2019 - 14:59
திடீர் என விபத்துக்குள்ளான விமானம்...!!
216

Views
ஈரானில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து, போயிங் 707 ரக சரக்கு விமானம் ஈரானுக்கு புறப்பட்டு வந்தது.

அதில், விமானிகள் உள்ளிட்ட 15 பேர் பயணம் செய்தனர். 

அந்த சரக்கு விமானம் ஈரானின் கராஜ் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, மோசமான வானிலை காரணமாக, கம்பி வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.

தரையில் விழுந்து நொறுங்கியதும் விமானம் தீப்பிடித்தது. 

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 15 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,585 Views
25,634 Views
1,533 Views
13,343 Views
138 Views
59,998 Views
Top