பிரதமர் தெரேசா மே தோல்வி

Wednesday, 16 January 2019 - 8:01

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் ப்ரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக,  பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே தோல்வியடைந்துள்ளார்.

அதற்கமைய தெரசா மே 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக 432 பேரும், ஆதரவாக 202 பேரும் வாக்களித்தனர்.

இதனையடுத்து, தெரேசா மேக்கு எதிராக நம்பிக்கை இல்லாபிரேரணை ஒன்று நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையிலும் தெரேசா மே தோல்வியடையும் பட்சத்தில் பொது தேர்தல் ஒன்றுக்கு செல்லும் நிலை ஏற்படும்.

தற்போதைய இந்தநிலை பிரதமர் தெரசா மே அரசாங்கத்திற்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips