Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4...
Friday, 18 January 2019 - 8:13
இன்று எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தை பொறுப்பேற்கும் மஹிந்த...
150

Views
எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தை இன்று மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று காலை 8.45 அளவில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், அவர் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த அலுவலகத்தை பயன்படுத்தி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தலைவர் ஆர்.சம்பந்தன் அதனை மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சட்டப்படி எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இதேவேளை, தற்போதைய அசாங்கம் வலுகட்டாயமாக பதவியில் இருப்பதற்கு ஆதரவளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்க போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,240 Views
27,919 Views
196 Views
16,064 Views
233 Views
62,933 Views
Top