%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
Friday, 18 January 2019 - 13:07
பாரிய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பங்களாதேஷ் அதிகாரிகள் விசாரணை
132

Views
இலங்கை வரலாற்றில் அதிக நிறைகொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு பங்களாதேஷ் நாட்டவர்களும் பங்களாதேஷின் போதைப்பொருள் தடுப்பு திணைக்களத்தினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் போதைப்பொருள் தடுப்புப் திணைக்களத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இலங்கை வந்தனர்.

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு உதவும் வகையில் அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் கைதான பங்களாதேஷ் நாட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பங்களாதேஷிலும் இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தரவுகள் பங்களாதேஷ் போதைப்பொருள் தடுப்புப் திணைக்களத்தினரால் இலங்கை காவல்துறையினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த குழுவினர் இன்று பிற்பகல் 3 மணியளவில் காவல்துறைமா அதிபரை சந்திக்கவுள்ளதாகவும், அவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு உயர் அதிகாரியொருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தெஹிவலை பிரதேசத்தில் வைத்து 3 ஆயிரத்து 336 மில்லியன் பெறுமதியான 278 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்த போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் பெண்ணொருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,475 Views
46,758 Views
2,473 Views
56,035 Views
1,213 Views
105,738 Views
Top