%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Friday, 18 January 2019 - 12:46
பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் நலன்பேணலுக்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்
5

Views
பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் நலன்பேணலுக்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏற்படுத்தப்பட்டுள்ள இலங்கை - பிலிப்பைன்ஸின் புதிய நட்புறவின் மூலம், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் மனிலா நகரில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உயர் கல்விபெறும் மாணவர்கள், தொழில்வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அனைத்து பிரச்சினைகளையும் பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவரிடம் முன்வைக்குமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை இங்கே
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top