Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 18 January 2019 - 13:12
வனாத்துமுல்லை பண்ணை உரிமையாளர் கைது
550

Views
வெடிப்பொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் என்பன கைப்பற்றப்பட்ட வனாத்துமுல்லை பண்ணையொன்றின் உரிமையாளர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நாடு முழுவதிலும் பதிவான புத்தர் சிலைகள் உடைக்கப்படுகின்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறை விசாரணைக் குழுவொன்றினால் இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தர் சிலைகளை உடைக்கும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முந்தினம், வனாத்துமுல்ல, மங்களபுர, கரடிப்புவல் போன்ற பிரதேசங்களுக்கு சென்றிருந்தனர்.

இதன்போதே, குறித்த விவசாய பண்ணை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது 100 கிலோகிராம் வெடிமருந்தும் 100 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த வெடிப்பொருட்களின் வகைகளை அறிந்துகொள்வதற்காக இன்றைய தினம் வனாத்துமுல்லை பிரதேசத்திற்கு நிபுணர் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், எதற்காக குறித்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் கண்டறியப்படவில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 3 விசேட குற்றப் புலனாய்வு குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கருத்தில் கொண்டு சட்டவிரோத துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருக்கின்றவர்களை கைதுசெய்கின்ற காவல்துறையினருக்கும் அது தொடர்பில் தகவல் வழங்குகின்றவர்களுக்கும் பரிசில்களை வழங்க காவல்துறை தீர்மானித்துள்ளது.

துப்பாக்கியின் வகையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,160 Views
27,709 Views
1,285 Views
15,828 Views
185 Views
62,651 Views
Top