சுவிர்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு செல்லவிருந்த அமெரிக்க குழுவின் விஜயம் ரத்து

Friday, 18 January 2019 - 13:49

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
அமெரிக்காவில் அரசத் துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சார்பில், சுவிர்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு செல்லவிருந்த அமெரிக்க குழுவின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, குறித்த குழு அங்கு செல்லவிருந்தது.

இந்தநிலையில் அந்த குழுவினரின் பயணத்தை டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

திரைசேரிக்கு பொறுப்பான அமைச்சர் ஸ்டீவ் மினுச்சின் தலைமையில், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு டாவோஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அரச துறைகள் முடக்கத்தினால், 8 லட்சம் அரச ஊழியர்கள் வேதனம் இன்றி பாதிகப்பட்டுள்ளனர்.

இந்தநிலை நீடிப்பதால், அவர்களுக்கு தனது அமைச்சரவை உறுப்பினர்களின் உதவி தேவைப்படுவதன் காரணத்தினால், டாவோஸ் பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips