டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட புதிய சமரச முயற்சிக்கு ஜனநாயக கட்சி எதிர்ப்பு

Monday, 21 January 2019 - 7:52

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
அமெரிக்கா - மெக்ஸிகோவிற்கு இடையில் எல்லைச்சுவர் அமைக்கும் விடயத்தில், டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட புதிய சமரச முயற்சிக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு உள்நுழையும் ஏதிலிகளை கட்டுப்படுத்த அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவர் அமைக்க, உள்நாட்டு நிதியில் 5.7 பில்லியன் டொலர் ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில், நேற்று முந்தினம், வெள்ளை மாளிகையில் வைத்து உரையாற்றிய ட்ரம்ப், எல்லை சுவர் அமைப்பதற்கான தனது கருத்துக்களை முன்வைத்தார்.

அதில், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவர்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் விசேடமாக முன்வைக்கப்பட்டது.

எனவே குறித்த சுவரின் மூலம் அமெரிக்கர்களின் எதிர்காலத்தை பேணி பாதுகாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ட்ரம்பின் இந்த சமரச முயற்சியை ஜனநாயக கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

அரச திணைக்களங்கள் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளன

எனவே, அரச திணைக்களங்களை மீண்டும் இயங்க செய்வதற்கான நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுக்க வேண்டும்.

அதனை விடுத்து சமரச முயற்சிகள் தேவையற்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips