பொதுமக்களுக்கு சொந்தமான 1208.27 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

Monday, 21 January 2019 - 8:32

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+1208.27+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வடக்கில் பாதுகாப்பு மற்றும் தனியார் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 1208.27 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 44.6 ஏக்கர் காணி நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 119.79 ஏக்கர் காணி நிலப்பரப்பும், கிளிநொச்சியில் 485 ஏக்கர் காணி நிலப்பரப்பும் விடுவிக்கப்படவுள்ளன.

இதுதவிர மன்னார் மாவட்டத்தில் 504.5 ஏக்கர் காணி நிலப்பரப்பும், வவுனியாவில் 54.38 ஹெக்டயார் காணி நிலப்பரப்பும் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips