%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%21%21
Monday, 21 January 2019 - 11:20
மட்டக்களப்பில் கொடூரம் - வீதியில் வீசப்பட்ட இரண்டரை மாத சிசு!!
16

Views
மட்டக்களப்பு கிரான் பகுதியில் வீதியொன்றிற்கு அருகில் வீசப்பட்டுக் கிடந்த இரண்டரை மாத வயதுடைய சிசுவொன்றை காவல் துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.

காவல் துறையினருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து கிரான் முருகன் கோயில் வீதிக்குச் சென்றபோது அங்கு வீசப்பட்டுக் கிடந்த கைக் குழந்தையைத் மீட்டெடுத்து உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.

நேற்றிரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த சிசு வீசப்பட்டிருக்கலாம் என விசாரணைகளின் போது பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டிருந்த குறித்த சிசு அழகாக ஆடை உடுத்தப்பட்ட நிலையிலேயே தெரு மருங்கில் கிடத்தப்பட்டிருந்ததாகவும் குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த காவல் துறையினர், இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top