Monday, 21 January 2019 - 13:38
ஆயிரம் ரூபாய் வேதனத்தை வலியுறுத்தி மீண்டும் ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி சிவில் தொழிற்சங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் சில இணைந்து இன்று கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை தொடரூந்து நிலையங்களுக்கு முன்னாலும் துண்டு பிரசுங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.
இதனுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி நாளை மறுதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு, ஹப்புத்தளை, பசறை, அட்டன், நாவலபிட்டி, ரத்தோட்டை, இரத்தினபுரி மற்றும் கேகாலை நகரங்களை மையப்படுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவுள்ளது.