Hirunews Logo
3700+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21
Monday, 21 January 2019 - 13:04
3700 துப்பாக்கிகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் வௌியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!
122

Views
இலங்கையில் அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட 3 ஆயிரத்து 700 துப்பாக்கிகள் தொடர்பில் தகவல்கள் இல்லையென பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் மொத்தமாக 4 ஆயிரத்து 700 துப்பாக்கிகளுக்கு அனுமதிபத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் 3 ஆயிரத்து 700 துப்பாக்கிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இல்லை.

சிலர் 15 அல்லது 20 துப்பாக்கிகளுக்கு அனுமதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையானது அபாயகரம் மிகுந்ததாகும்.

பலரும் பாதாள உலக குழுவினருக்கு இந்த துப்பாக்கிகளை வாடகைக்கு வழங்கி பணம் சம்பாதிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், பதிவுசெய்யப்பட்ட அத்தகைய துப்பாக்கிகள் என்னவாகின என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த பணிக்காக சாதாரண காவல் துறையினரை ஈடுபடுத்தாமல் புலனாய்வு காவல்துறையினர் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,240 Views
27,919 Views
196 Views
16,064 Views
233 Views
62,933 Views
Top