%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Monday, 21 January 2019 - 13:44
நாலக டி சில்வாவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
115

Views
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்ட, முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு – கோட்டை பதில் நீதவான் முன்னிலையில், பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது உடல் நிலை தொடர்பில் சிறைச்சாலை மருத்துவமனை நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அவருக்கு தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பட வேண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பிரஜையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top