Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
Monday, 21 January 2019 - 13:37
குறைப்பாடுகளை மறைத்துக்கொள்வதற்காகவே அரசாங்கத்தை குற்றம் சுமத்தி வருகின்றனர்
2

Views
தங்களது குறைப்பாடுகளை மறைத்துக்கொள்வதற்காகவே எதிர்க்கட்சியினர் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அரசாங்கத்தை குற்றம் சுமத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜே சீ அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, மக்களின் அனுமதி கிடைக்காத அரசியல் அமைப்பொன்றை தயாரிப்பது நீதியானது அல்லவென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகலையில் நேற்று இட்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கான கட்டாயம் ஏற்படவில்லை.

அதனைவிட தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நாட்டில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவர் ஒருவரின் பக்கமே தான் எப்போதும் இருப்பதாக தெரிவித்த அவர், அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்டாளராக நிறுத்தப்பட்டால் அது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் எடுக்கப்படும் சிறந்த தீர்வாகும் எனவும் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,240 Views
27,919 Views
196 Views
16,064 Views
233 Views
62,933 Views
Top