Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Monday, 21 January 2019 - 15:16
நாமல் இந்த வார இறுதிக்குள் சி.ஐ.டியில்
75

Views
நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, விமல் வீரவங்ச மற்றும் அவரது மனைவி சசி வீரவங்சவும் இதுவரை  வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை என அந்த திணைக்களம் இன்று நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இதனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த வாரத்தினுள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது என அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இது, ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கொலை சூழ்ச்சி திட்டம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் கோட்டை மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே ஆகும்.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதித்திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் இந்திய நாட்டவர் ஆகியோர் எதிர்வரும் 30ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,240 Views
27,919 Views
196 Views
16,064 Views
233 Views
62,933 Views
Top