Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Monday, 21 January 2019 - 22:00
சீனாவின் கடந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி
4

Views
உலகின் இரண்டாவது பொருளாதார வளர்ச்சியை கொண்ட சீனாவின் 2018 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி 6.6 சத வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வருடாந்தர உற்பத்தியில் தளர்வு நிலை ஏற்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக முரண்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன் மேலதிக ஏற்றுமதி வரியாக 250 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீன செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலை காரணமாக சர்வதேசத்துடனான ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு அதிக அளவிலான செலவீனம் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சீனாவின் இந்த வருட பொருளாதார வளர்ச்சி 6 சத வீதமாக வீழ்ச்சியடைவதற்கான ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,240 Views
27,919 Views
196 Views
16,064 Views
233 Views
62,933 Views
Top