புதிய அரசியலமைப்பை ஒருபோதும் நிறைவேற்றமுடியாது - ஜே.வீ.பி

Wednesday, 23 January 2019 - 7:47

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AF%80.%E0%AE%AA%E0%AE%BF
புதிய அரசியலமைப்பை தற்போதைய நாடாளுமன்றத்தினுள் ஒருபோதும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது.

ஜே.வீ.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

புதிதாக கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படும் அரசியலமைப்பையோ சட்டமூலத்தையோ நாங்கள் இன்னும் காணவில்லை.

நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுக்கும் காண்பிக்காது எந்த யோசனையையும் நிறைவேற்ற முடியாது.

அரசியலமைப்பு சட்டமூலத்திற்கு அரசியலமைப்பு பேரவையில் அனுமதி கிடைக்க பெற வேண்டும்.

அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டும்.

மாகாண சபைகளின் அதிகாரம் பெறப்பட வேண்டும்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும்.

இறுதியில் ஜனாதிபதி அதில் கையெழுத்திட வேண்டும்.

இந்த சகல விடயங்களும் எதிர்வரும் 7 அல்லது 8 மாதங்களில் இடம்பெறுமா?

எனவே புதிய அரசியலமைப்பு தற்போதைய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜே.வீ.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips