Wednesday, 23 January 2019 - 8:07
2வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி
தென்னாப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
டர்பனில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஹசன் அலி 59 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி 42 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.
தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரஸ்ஸி வான் டெர் டஸன் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இதேவேளை, இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
நேபியரில் இடம்பெறும் இந்த போட்டி இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.