ரஷ்ய விமானம் ஒன்றை கடத்த முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்படும் ஒருவர் கைது

Wednesday, 23 January 2019 - 13:08

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81++
ரஷ்ய விமானம் ஒன்றை கடத்த முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சைபீரியாவில் இருந்து ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி நேற்று பயணித்துக் கொண்டிருந்த குறித்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தை ஆப்கானிஸ்தான் நோக்கி திரும்புமாறு விமான பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.

இதனால், அந்த விமானம் அவசரமாக மேற்கு சைபீரியாவின், காண்டி மான்சிய்ஸ்க் நகரில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் போது மதுபோதையில் இருந்ததாக, சைபீரிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips