%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Wednesday, 23 January 2019 - 20:14
சோனியா காந்தியின் மகளுக்கு காங்கிரஸில் முக்கிய பொறுப்பு
132

Views
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான ப்ரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றின் ஊடாக இன்று வெளியிட்டுள்ளது.

பிரியங்கா காந்தி, கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமலிருந்த நிலையில், தற்போது குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகும் வகையில் காங்கிரஸினால் பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top