Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B%21%21
Monday, 11 February 2019 - 21:27
பெற்றோல் டீசலின் விலை அதிகரிப்பு..! புதிய விலை விபரங்கள் இதோ!!
2,566

Views
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரை 147 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒனிறின் புதிய விலை 152 ரூபாவாகும்.

இதுவரை 123 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதுவரை 118 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாவாகும்.

இதுவரை 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 103 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,331 Views
28,228 Views
832 Views
16,457 Views
313 Views
63,354 Views
Top