%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Tuesday, 12 February 2019 - 20:14
சமிந்த விஜயசேகர இன்னும் கைது செய்யப்படவில்லை
327

Views
காவற்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பதுளை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசேகர இன்னும் கைது செய்யப்படவில்லை.

அவரை கைது செய்வதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்தார்.

இந்தநிலையில் இன்று அவர் காவற்துறையில் சரணடைவதாக கூறி இருந்தார்.

எனினும் இதுவரையில் அவர் காவற்துறையில் சரணடையவில்லை என பண்டாரவளை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியின் சாரதி, தம்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிப்பெற்றிருந்த நிலையில், இன்று அவர் பதுளை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top