Tuesday, 12 February 2019 - 20:13
இது மக்களுக்கு நன்மை செய்யும் அரசாங்கம் இல்லை - சாந்த பண்டார
தற்போதைய அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைத்து வருவதாக சிறிலங்கா சுதந்திர கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டை மிகவும் மோசமான வழியில் நடத்திச் செல்கிறது.
மக்களின் உண்மையான பிரச்சினைகள் அனைத்தும் பல்வேறு விடயங்களால் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன.
இது மக்களுக்கு நன்மை செய்யும் அரசாங்கம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.