Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Wednesday, 13 February 2019 - 20:41
வௌியான செய்தியை மறுத்துள்ள பிரித்தானிய பிரதமர்
31

Views
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் நடவடிக்கைகளை பிரித்தானிய பிரதமர் தாமதப்படுத்தலாம் என்று வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிட் விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ப்ரெக்சிட் ஒப்பந்தம் இன்னும் இணக்கப்பாட்டுக்கு வராத நிலையில், இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது ப்ரெக்சிட் நடவடிக்கை தாமதப்படும் என்று இரண்டு தெரிவுகளை பிரித்தானிய பிரதமர் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

எனினும் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதியுடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,939 Views
30,146 Views
291 Views
19,001 Views
260 Views
66,012 Views
Top