%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Thursday, 14 February 2019 - 12:57
நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
1,777

Views
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரக் குழு பிரதானி போல் மனஃபோர்ட் விசாரணையாளர்களிடம் பொய்கூறினார் என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான விசாரணைகளை ரொபர்ட் முல்லெர் தலைமையிலான எஃப்.பி.ஐ குழு ஒன்று மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணைக் குழுவில் முன்னிலையாகி இருந்த மனஃபோர்ட், விசாரணையாளர்களிடம் உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை வழங்கியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

அவர் ரஷ்யாவின் அரசியல் அலோசகர் கொன்ஸ்டான்டின் கிளிம்னிக் உடன் தொடர்பு கொண்டிருந்ததமையும் தெரியவந்துள்ளது.

க்ளிம்னிக், ரஷ்யாவின் உளவு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றவர் என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் வேர்ஜினியாவில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தடுப்பில் இருந்த மனஃபோர்ட்டுக்கு, நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top