%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+
Thursday, 14 February 2019 - 13:28
மதூஷ் தொடர்பில் டுபாய் நீதிமன்றின் உத்தரவு
6,195

Views
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகத்துக்குரியவர்களை இரண்டுவார காலத்திற்கு தடுத்துவைத்திருப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
 
மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகத்துக்குரியவர்கள் கடந்த 5ஆம் திகதி டுபாயில் உள்ள சொகுசு விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டு நீதிமன்றில் முதன் முறையாக அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்தநிலையில், டுபாயில் காவல்துறையினர் அவர்களை தடுத்துவைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுக்க உள்ளனர்.
 
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கையின் காவல்துறை விசாரணை குழுவினரும் எதிர்வரும் நாட்களில் டுபாய்க்கு செல்லவுள்ளனர் என காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உயரதிகாரி தெரிவித்தார்.
 
எவ்வாறிருப்பினும், குறித்த விசாரணைக் குழுவில் உள்ளடங்களும் அதிகாரிகள் தொடர்பில் தற்போதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மாகந்துரே மதூஷ் கைது செய்யப்பட்டமை மற்றும் அவரின் பாதாள உலகக்குழு செயற்பாடுகள் என்பன குறித்து பகிரங்க விவாதம் ஒன்றை வழங்குமாறு ஜே.வி.பி, சபாநாயகரிடம் கோரியுள்ளது.
 
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் என்பனவற்றுடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் விவாதமொன்றை நடத்துவதன் ஊடாக தம்மிடமுள்ள தகவல்களை வெளிப்படுத்த எதிர்பார்ப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் என்பனவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களுக்கு உதவிபுரியும் அரசியல்வாதிகள் யார்? என்பன தொடர்பான தகவல்களையும் நாடாளுமன்ற விவாதத்தில் வெளிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விவாதத்தை நடத்துவது தொடர்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது குறித்த விவாதத்திற்கான தினம் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top