+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...
Thursday, 14 February 2019 - 13:29
தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரும் போராட்டம்...
249

Views
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறுகோரும் போராட்டம் கேகாலை மாவட்டத்தில் நாளைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மாகந்துரே மதூஷை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, அர்ஜுன் மகேந்திரனை கைதுசெய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை எனவும் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வருகின்றது.

இந்த நிலையில், நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்ய ஏன் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top