%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+..
Thursday, 14 February 2019 - 13:31
தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ..
150

Views
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் முதலானவற்றுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
அநுராதபுரத்தில் இடம்பெறும் சுற்றுச்சூழல் மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கேரள கஞ்சாவுடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவரை  கைது செய்வதற்கான சுற்றிவளைப்பை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்குள்ளும் போதைப்பொருட்கள் உள்நுழைந்துள்ளன.

அப்படியாயின் நிலைமை எவ்வாறுள்ளது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில், போதைப்பொருள் தொடர்பான செயற்பாடுகளின் போது பதவி நிலைகளைக் கருத்திற்கொள்ளாமல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top