Thursday, 14 February 2019 - 15:16
புராதன பாதுகாப்பு தூபியில் ஏறி நின்று படம் பிடித்த இரு இளைஞர்கள் கைது..
அனுராதபுரம் - மிகிந்தலை புராதன பாதுகாப்பு தூபியில் ஏறி நின்று படம் பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் மூதூரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் குறித்த தூபியின் மீது ஏறி நின்று படம்பிடித்ததாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் காவற்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, காவற்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
நிட்டம்புவ - திஹாரிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் அவர்கள், சுற்றுலாப் பயணமாக மிகிந்தலை சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஹொரவபத்தானை - கிரலாகல தூபியில் ஏறிநின்றி படம் பிடித்தமைக்காக 8 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டனர்.
அதேபோன்று பிதுரங்கலை குன்றில் ஏறிநின்றி அரைநிர்வாணமாக படம் பிடித்து சமுகவலைத்தளங்களில் பதிவேற்றியமைக்காக சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.