%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Thursday, 14 February 2019 - 16:36
ஹோர்டன் சமவௌியில் 5 பேருக்கு நேர்ந்த கதி (காணொளி)
16

Views
ஹோர்டன் சமவெளி பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவுக்கு சொந்தமான கிரிமெடி ஓயா பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது பூங்காவுக்கு பொறுப்பான அதிகாரிகளினால் குறித்த  சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் பலாங்கொடை , பெல்மடுல்ல மற்றும் ஓபநாயக்க பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் ஒருவருக்கு தலா ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வீதம் 5 பேருக்கும் 8 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,  ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அதிக பட்ச அபாரதத் தொகை இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top