குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி..

Friday, 15 February 2019 - 8:10

%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+40+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய மகிழுந்து குண்டுத் தாக்குதலில் 40 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
குறித்த பகுதியில் 78 பாதுகாப்பு வாகனங்களில் சுமார் 2 ஆயிரத்து 500 படையினர் பயணித்துள்ளனர்.

இதன்போது, 320 கிலோகிராம் வெடிபொருட்கள் நிரம்பிய மகிழுந்தின்மூலம் பேருந்து ஒன்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானை தளமாகக்கொண்டு இயங்கும் ஜெய்ஸ் மொஹமட்  என்ற தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரின் உரி இராணுவ தளத்திலும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 படையினர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தங்களது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips