%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+23+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.....%21
Friday, 15 February 2019 - 12:26
மண் சரிவில் சிக்குண்டு 23 பேர் பலி.....!
14

Views

சிம்பாப்வேயில் தங்க அகழ்வு சுரங்கத்தில் அகழ்வு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிம்பாப்வே தலைநகரம் ஹராரேவிலிருந்து 145 கிலோமீற்றர் தொலைவில் சட்டவிரோதமான முறையில் இவர்கள் தங்க அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் சுரங்கங்களின் மேற்புரத்தில் காணப்படுகின்ற வெடிப்புக்கள் வாயிலாக உட்புகுந்துள்ளமையினால் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளன.

இதில் சிக்குண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ரொயிட்டர் செய்தி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரழந்தவர்களின் சடலங்களை மீட்க அந்நாட்டு மீட்பு பணியினர் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top