%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+5+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Friday, 15 February 2019 - 21:24
திடீர் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலி
29

Views
ஈராக் இராணுவம் மேற்கொண்ட திடீர் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌசூல் பிரதேசத்தில் உள்ள குகையில் தீவிரவாதிகள் உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இராணுவம் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தவிர, அவர்கள் உள்ளதாக கருதப்படும் மேலும் 8 குகைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் அண்டு இறுதியில், அப்போதைய ஈராக்கிய பிரதமர் ஹாதர் அல்-அபாடி, ஈராக்கில் நிலைகொண்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top