%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Saturday, 16 February 2019 - 8:09
குண்டு தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள கட்சிகள்
2,906

Views
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப்படையினரின் வாகன அணி வகுப்பு மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலை தமிழக அரசியல் கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளன.
 
இந்த சம்பவமானது கவலையளிப்பதாகவும் இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்படுவதாகவும் அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.
 
பாட்டளி மக்கள் கட்சி, அகில இந்திய சமத்துவ கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
 
இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் முயன்றதற்காக பாகிஸ்தானுக்கு பல்வேறு தருணங்களில் இந்திய பாதுகாப்பு படைகள் பாடம் புகட்டியுள்ளன.
 
அதற்கு பிறகும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது என அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.
 
இனி வரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
 
இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் இந்தியா பாடம் புகட்ட வேண்டும் என அந்த கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top