%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Wednesday, 20 February 2019 - 13:53
தொலைபேசி அழைப்பின் பின்னர் மாயமான இளைஞர் - காணொளி
13,594

Views
மஸ்கெலிய பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் மஸ்கெலிய காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர் மஸ்கெலிய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் வசித்து வரும் பெதும் மதுசங்க என்ற 30 வயதான திருமணமாகாத நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு அவரின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாகவும், அந்த அழைப்பின் பின்னர் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக தெரிவித்துள்ள தந்தை, தனது மகன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என குறிப்ப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காணாமல் போயுள்ள இளைஞருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பாதணி இன்றைய தினம் மவுசாகெல நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருந்து உறவினர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போயுள்ள இளைஞரை காவல்துறையினரும் மீனவர்களும் இணைந்து அந்த நீர்த்தேக்கத்தில் தேடி வருகின்றனர்.

இளைஞர் தொடர்பில் தகவல் அறிந்தால் மஸ்கெலிய காவல்துறைக்கு அறியப்படுத்துமாறு காணாமல் போயுள்ள நபரின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top