யாழ் ஊடகவியலாளரைத் தாக்கிய காவல்துறை அதிகாரியை கடுமையாக எச்சரித்த நீதவான்

Thursday, 21 February 2019 - 8:41

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
சமூகத்துக்காக கடமையாற்றும் ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதுடன், அவர்களைத் தாக்கவோ தாக்க முயற்சிக்கவோ கூடாது என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல், காவல்துறையினரை அறிவுறுத்தினார்.

கொக்குவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரைத் தாக்கிய கோப்பாய் காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரியை நேற்றைய தினம் எச்சரித்த நீதவான், அவரை பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தின்போது யாழ்ப்பாண ஊடகவியலாளர் நடராஜா குகராஜ், கோப்பாய் காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரியினால் தாக்கப்பட்டார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் நடராஜா குகராஜிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கோப்பாய் காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரி பணியிலிருந்து இடைநீக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது, கைதுசெய்யப்பட்ட கோப்பாய் காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரியை எச்சரித்த நீதவான், 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்தார்.

அத்துடன், குறித்த வழக்கை வரும் மார்ச் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் சாட்சியையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதேநேரம், கொக்குவில்லில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக் கண்டித்துள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியமையானது, ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் சுயாதீனமான செயற்பாட்டையும் மீறும் ஒரு செயற்பாடு என்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips