Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Thursday, 21 February 2019 - 11:03
மருத்துவமனையையே அலறவிட்ட முதியவர் - படங்கள்
596

Views
தமிழகம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாம்பு கடித்த முதியவர் ஒருவர், தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னகண்டியன்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி ரங்கநாதன்.

இவர் வழக்கம் போல் அவரது விளை நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இரண்டடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று அவரது காலில் கடித்துள்ளது.

பாம்பிடம் கடிபட்டபோதிலும் அஞ்சாத முதியவர் ரங்கநாதன், அதனை நெகிழிப் பையில் போட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் அரசு மருத்துவமனையின் காத்திருந்தனர்.

அப்போது நெகிழிப் பையில் இரண்டடி நீளமுள்ள நல்ல பாம்பு உயிருடன் நெளிந்து கொண்டிருந்ததை கண்ட மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடியதால், மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது.

அதன்பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் பாம்பின் விஷத்தன்மையை அறிந்த பின்,அதற்கேற்ப மருத்துவர்கள் ரங்கநாதனுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதனைதொடர்ந்து அந்த நல்ல பாம்பு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இரண்டடி நீள நல்ல பாம்புடன் விவசாயி ரங்கநாதன் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2-feet-snake-found-in-patient-hand-in-govt-hospital-at-virudhachalam

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,939 Views
30,146 Views
291 Views
19,001 Views
260 Views
66,012 Views
Top