Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E2%80%93+C.C.T.V+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Thursday, 21 February 2019 - 15:27
அதிவேகமாக சிற்றூர்தியை செலுத்திய மாணவியால் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவன் – C.C.T.V காணொளி
209

Views
தமிழகம் - கோவையில் அதிவேகமாக சிற்றூர்தியை செலுத்தி கல்லூரி மாணவர் மீது மோதிய சம்பவம் தொடர்பில் அதனை செலுத்திய மாணவி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக செய்திகள் இதனைக் குறிப்பிட்டுள்ளன.

மாணவி அதிவேகமாக சிற்றூர்தியை செலுத்திய வேளை எதிர் திசையில் உந்துருளியில் பயணித்த மாணவர் மீது அது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர் படுகாயமடைந்தார். அவர் மீது மோதிய சிற்றூர்தி நிற்காமல் மீண்டும் அதிவேகமாக சென்று விட்டது.

படுகாயமடைந்த மாணவரை பொதுமக்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்ப்பித்தனர்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறை, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டது.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கெமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியது.

குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத் என்ற 21 வயதான மாணவி என தெரியவந்தது.

தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் தனது தோழியுடன் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவர் பாலாஜியின் தந்தை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்பேரில் மாணவி மீது அதிவேகமாக சிற்றூர்தியை செலுத்துதல், விபத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,966 Views
30,281 Views
443 Views
19,170 Views
28 Views
66,186 Views
Top